திராவிட அரசியலை மாற்றும் ஆன்மீக அரசியல்.. ரஜினிக்கு குருமூர்த்தி வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ள குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் வருகை 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் அரசியலை மாற்றும் என தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவேன் என இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Auditor gurumurthy has said rajini entry will change the dravidian politics

இந்நிலையில் துக்ளக் ஆசிரியரான குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் வருகை திராவிட இயக்கங்களின் 60 ஆண்டுக்கால அரசியலை மாற்றும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கருத்து பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் என்று அனைவரையும் விமர்சித்து வந்த ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது புதிய பரிமாணத்தில் பார்க்கவேண்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Auditor gurumurthy has said rajini entry will change the dravidian politics. He tweeted this comment and also said, his spiritual politics is nearest one to modis.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற