அஸ்வினிக்கு வீடு புகுந்து கட்டாய தாலி கட்டினாரா அழகேசன்?
கொலையாளி அழகேசன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அஸ்வினிக்கு கட்டாய தாலி கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது
Recommended Video

சென்னை: கொலையாளி அழகேசன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அஸ்வினிக்கு கட்டாய தாலி கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை கேகே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் முதலாமாண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி இன்று கல்லூரி வாசலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி கொலைக்கான காரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலை மறுத்த மாணவி
சென்னை மதுரவாயிலைச் சேர்ந்த மாணவி அஸ்வினியை அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அழகேசனின் காதலை அஸ்வினி மறுத்ததாக கூறப்படுகிறது.

கட்டாய தாலி
இந்நிலையில் மாணவி அஸ்வினிக்கு ஒருமாதம் முன் அழகேசன் கட்டாய தாலி கட்டியதாக கூறப்படுகிறது. வீடு புகுந்து கட்டாய தாலி கட்டிய அழகேசன் மீது அஸ்வினி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

உறவினர் வீட்டில்
இதனையடுத்து மதுரவாயல் போலீசார் அழகேசனை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அழகேசனின் தொல்லையில் இருந்து தப்பிக்க அஸ்வினியை ஜாஃபர்கான் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்துள்ளனர் அவரது பெற்றோர்.

கொலை செய்ய திட்டம்
அழகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் அஸ்வினியை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை
அதன்படி இன்று மதிய இடைவேளையின் போது கல்லூரியில் இருந்து வெளியே வந்த அஸ்வினியை காத்திருந்த அழகேசன் ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications