அப்துல்கலாம் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம்… அழகிரி வலியுறுத்தல்
நாமக்கல்: டாக்டர் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும்,அது தான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும், எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் தாயார் அன்னபூரணி அம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் உள்ள கே.பி.ராமலிங்கத்தின் வீட்டிற்கு இன்று காலையில் வந்தார். பின்னர், அன்னபூரணி அம்மாள் உருவபடத்திற்கு மலர் வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மறைவு இந்தியாவுக்கு மாபெரும் இழப்பு. தமிழ்நாட்டின் இதயமாக இருந்து, இந்தியாவின் இமயமாக மாறியவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம். மிக எளிமையாக இருந்தவர். அவரது எளிமை ஒரு முறை அல்ல, பல முறை கண்டுள்ளேன்.
தான் மத்திய அமைச்சராக இருந்தபோது தானும், மற்ற அமைச்சர்களும் விமானத்தில் முதல் வகுப்பில் சென்றுள்ளோம். ஆனால், அவர் ஜனாதிபதியாக இருந்த பிறகும் கூட 2ம் வகுப்பில் தான் பயணம் மேற்கொள்வார். அத்தகைய எளிமையாக இருந்தவர்.
ராமேஸ்வரத்தில் டாக்டர் அப்துல்கலாம் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். அது தான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை என்றும் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications