தலப்பாக்கட்டி, ஆம்பூர் வரிசையில் சென்னையை கலக்கும் புதுவகை பிரியாணி! ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடலுக்கு நன்மை அளிக்கக் கூடிய மூங்கில் கட்டையில் தயார் செய்யப்படும் பிரியாணி தற்போது சென்னையில் சில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிரியாணி என்றாலே அது சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி அதற்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு என்றே கூறலாம்.

பிரபலமில்லாத ஹோட்டல்களில் தயார் செய்யப்படும் பிரியாணிகளுக்கே மவுசு அதிகம் உள்ள நிலையில் பிரியாணிக்கு பேர் போன தலப்பாக்கட்டி, ஆம்பூர், ஹைதராபாத் முகல் பிரியாணி ஆகியவற்றின் சுவையை கேட்கவே வேண்டாம்.

 பிரியாணி என்றால்

பிரியாணி என்றால்

பொதுவாக பிரியாணி என்றாலே அதில் காரமும், எண்ணெய்யையும்தான் பிரதானம் என்ற காலம் போய்விட்டது. தற்போது விதவிதமாக பிரியாணிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இவை உடல் நலத்துக்கு நன்மை பயக்குமா என்பது சந்தேகமே.

 நன்மை அளிக்கும் மூங்கில் பிரியாணி

நன்மை அளிக்கும் மூங்கில் பிரியாணி

தற்போது உடலுக்கு நன்மை அளிக்கும் மூங்கில் பிரியாணிகள் சென்னையில் பிரபலமடைந்து வருகிறது. இவை ரூ.200 முதல் ரூ. 220 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மூங்கிலில் செய்யப்படும் பிரியாணிகளால் உடலுக்கு நன்மை அளிக்கும்.

 மூங்கிலின் நன்மைகள்

மூங்கிலின் நன்மைகள்

மூங்கிலில் செய்யப்படும் உணவானது உடல் எடையை குறைத்தல், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துதல், புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுதல் உள்ளிட்ட நற்குணங்களைக் கொண்டது. இதனால் தற்போது அனைத்திலும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதால் ஆரோக்கியம் என்பது மருந்துக் கூட இல்லாத நிலை உள்ளது.

 விருப்பமான உணவு

விருப்பமான உணவு

அனைவரும் அவ்வப்போது விரும்பி உண்ணக்கூடிய உணவு பிரியாணி என்பதால் இதிலாவது சிறிது உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கும் வகையை தேர்ந்தெடுக்க தற்போது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். இதனால் சென்னையில் ஆங்காங்கே கடைகளில் இந்த முறை உணவு தயாரிக்கப்படுகின்றன.

 தயாரிப்பது எப்படி

தயாரிப்பது எப்படி


நன்கு காய்ந்த மூங்கில் கட்டையை சுத்தம் செய்து அதில் உள்ள ஓட்டையில் பிரியாணிக்கு தேவையான மசாலாக்களையும் முக்கால் வேக்காட்டு அரிசியையும் சேர்த்து தனலில் வாட்டி எடுத்தால் சுட சுட பிரியாணி தயார். பிரியாணிக்கு பயன்படுத்தும் தக்காளி, சிக்கன், மட்டன், மீன், இறால் ஆகியவற்றில் தண்ணீர் உள்ளதால் தண்ணீரை நாம் அதிகம் சேர்க்க வேண்டியதில்லை. ஹோட்டல்களில் மூங்கில் கட்டையுடன் பரிமாறப்படுகிறது. அதன் ஒரு வழியில் இருந்து நமக்கு தேவையான பிரியாணியை சிறிதுசிறிதாக சாப்பிடலாம். ஆஹா.... இந்த செய்முறையை கேட்கும் போதே இதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bamboo Briyani is going to familiar in Chennai shops. Bamboo is very healthy, so people need this type of food.
Please Wait while comments are loading...