திருப்பூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - மாணவர்களை தவிக்க விட்ட அரசியல்வாதிகள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் தனியார், அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்து வந்தவர்கள் எந்த வசதியும் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூரை அடுத்த பல்லடம், கரையாம்புதூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.

Birth Centenary of MGR Tirupur

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பித்துரை ஆகியோர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்தனர்.

பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் எம்ஜிஆர் திரையுல வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த காட்சிப்பதிவுகள் பிரமாண்ட எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அதை ராஜ்யசபா முன்னாள் எம்.பி., ரபிபெர்னாட் விளக்கினார்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் திரண்டு வந்திருந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை டாக்டர் கண்ணன் கிரிஷ் எடுத்தார். விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து சென்றவர்கள் குடிநீர் வசதி, உணவு வசதிகளை செய்து தரவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

விழாவில் அதிமுகவினர் பங்கேற்பதற்காக கோவை புறநகர் பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களை கட்சி நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக கொண்டு சென்றனர். இதனால், பள்ளி நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
School students affected Tirupur MGR birthday Centenary function.
Please Wait while comments are loading...