For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14தான்... இதுதான் 'கேப்டன்' உங்க 'சீட்'.. லிஸ்ட் கொடுத்த பாஜக!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவின் பிடிவாதம் ஒரு புறம் இருக்க, அக்கட்சிக்கு 14 இடங்கள்தான், இந்தத் தொகுதிகள்தான் என்று கூறி ஒரு பட்டியலை பாஜக தேமுதிகவிடம் கொடுத்துள்ளதாம்.

ஆரம்பத்தில் 20 தொகுதிகளுக்கு மேல் கேட்டு வந்தது தேமுதிக. ஆனால் தொடர்ந்து பேசப்பட்ட பேரத்தின் விளைவாக அதை 18 ஆக குறைத்தது.

ஆனால் அவ்வளவு கொடுத்தால் கம்பெனிக்குக் கட்டுப்படியாகாது என்று பாஜக தரப்பில் கெஞ்சப்பட்டதால், 16 வரை இறங்கி வந்தது தேமுதிக.

ஆனால் அதுவும் சரிப்பட்டு வராது என்று கூறிய பாஜக தற்போது 14 தொகுதிகள் வரை தரத் தயாராக உள்ளதாம்.

மாறி மாறி பேச்சு

மாறி மாறி பேச்சு

இந்தத் தொகுதிகள் குறித்து இதுவரை 2 முறை அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

தேமுதிக கொடுத்த பட்டியல்

தேமுதிக கொடுத்த பட்டியல்

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தேமுதிக தான் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த ஒரு பட்டியலைக் கொடுத்தது.

பெரும்பாலானவை பாமக தொகுதிகள்

பெரும்பாலானவை பாமக தொகுதிகள்

தேமுதிக சார்பில் கொடுக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த தொகுதிகளில் பெரும்பாலானவை பாமக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த மற்றும் போட்டியிட விரும்பும் தொகுதிகளாகும். இதனால் பாஜகவுக்கு சிக்கலானது.

பாஜக போட்டி பட்டியல்

பாஜக போட்டி பட்டியல்

இதையடுத்து யாருக்கும் பழுது ஏற்படாத வகையில், பாஜகவே ஒரு பட்டியலை தயார் செய்தது.

சுதீஷ் கையில் பட்டியல்

சுதீஷ் கையில் பட்டியல்

இந்த பட்டியலை நேற்று தேமுதிக இளைஞர் அணித் தலைவரான சுதீஷிடம் பாஜகவினர் கொடுத்துள்ளனர்.

பாதி தொகுதிகள் காலி

பாதி தொகுதிகள் காலி

இந்தப் பட்டியலைப் பார்த்த தேமுதிகவினர் அப்செட்டாகி விட்டனராம். அதாவது அவர்கள் கேட்டிருந்த தொகுதிகளில் பாதி பாஜக கொடுத்த பட்டியலில் இல்லையாம்.

தனித் தொகுதியை விரும்பாத விஜயகாந்த்

தனித் தொகுதியை விரும்பாத விஜயகாந்த்

மேலும் தனித் தொகுதிகளும் நிறைய பட்டியலில் இடம் பெற்றிருந்ததால் அதை விஜயகாந்த் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மறுபடியும் பேசுவோமா.

மறுபடியும் பேசுவோமா.

இந்தப் பட்டியல் சரிப்பட்டு வராது என்று விஜயகாந்த் கூறி விட்டாராம். இதனால் இன்று மறுபடியும் இரு தரப்பும் கூடிப் பேசவுள்ளதாம். அப்போது சில தொகுதிகளை மாற்றச் சொல்லப் போகிறதாம் தேமுதிக.

இதில் உடன்பாடு ஏற்பட்டால்தான் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று தேமுதிக தரப்பில் கூறுகிறார்கள்.

English summary
BJP has given a list of 14 seats to the DMDK. But the DMDK is not happy with the list, so the talks are conitnuing...!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X