திமுகவுக்கு சவாலாக இருப்பது பாஜக தான்... சொல்கிறார் தமிழிசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திமுகவுக்கு சவாலாக இருப்பது பாஜகதான் என தமிழிசை சவுந்ததராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆட்சியைக் கலைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுகவினர் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

BJP is challenge to the DMK: Tamilisai

அதற்கு பதிலளித்த அவர் மக்கள் பாஜகவை விரும்ப ஆரம்பித்துவிட்டனர் என்றார். திமுக எதிர்க்கட்சியாக பாஜகவைதான் நினைக்கிறது என்றார்.

அதனால்தான் அதிமுகவை விட்டுவிட்டு எப்போதும் பாஜகவையே விமர்சித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார், திமுகவுக்கு சவாலாக இருப்பது பாஜகதான், அதனால் தான் துரைமுருகனும், ஸ்டாலினும் பாஜகவை பற்றியே பேசி வருகின்றனர் என்றார்.

தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, தமிழகத்தில் தற்போது ஆட்சியை கலைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறினார். எல்லாம் நிலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் வேண்டுமானால் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என விரும்பலாம் என்றும் அவர் சாடினார். கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை தமிழகத்தின் தொண்மையை மறைக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu BJP leader Tamilisai says the BJP is challenge to the DMK. There is no indication of dissolution of the regime in Tamil Nadu Tamilisai said.
Please Wait while comments are loading...