நண்பர்களே ஒன்று சேருங்கள்... அதிமுகவினருக்கு இல. கணேசன் அட்வைஸ் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் பக்தி மிகுந்த அஞ்சலியாக இருக்கும் என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். இதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செலுத்தும் பக்தி நிறைந்த அஞ்சலியாக இருக்கும்.

Bjp Rajyasabha MP Ila.Ganeshan advised Admk ministers and MLAs
Ila. Ganesan meets press in Villupuram

மேலும், மக்கள் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. ஐந்தாண்டுகள் அதிமுக சரியாக ஆட்சி செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை நினைவில் கொண்டு, பிரிந்து சென்றவர்கள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தலை நடத்த பாஜக விரும்பவில்லை என்று பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bjp Rajya sabha M.P Ila. Ganeshan advised admk personalities that they have to reunion again and it is the correct way to pay homage to late CM Jayalalitha
Please Wait while comments are loading...