நான் தான் கூட்டணி தலைவர்... செலவுக்கு நீங்கதான் பொறுப்பேற்பு..: கேப்டன் நிபந்தனையால் மிரண்ட பாஜக!!

லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் மெகா கூட்டணி அமைப்பதில் பாஜக மும்முரம்காட்டி வருகிறது. மதிமுக, பாமக வரவை உறுதி செய்திருக்கும் பாஜக, தேமுதிகவை வளைப்பதில் தீவிரம்காட்டியது.
இதன் முதல்கட்டமாக பாஜக மேலிட பிரதிநிதி முரளிதர்ராவ் அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் நிபந்தனைகளாக சுதீஷ் சொன்னவை கேட்டு முரளிதர்ராவ் அதிர்ச்சியில் உறைந்து போனாராம்.
அதாவது, தாமே கூட்டணியின் தலைவர், தாம்தான் பிற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வேன், வடதமிழகத்தில் தேமுதிகவே கணிசமாக போட்டியிடும். தேர்தலில் பாஜகதான் செலவை ஏற்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனைகளாம்.
வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி ஒரு நிபந்தனையை இதுவரை எதிர்கொள்ளாததால் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம். இவ்வளவு செலவு செய்து 10 தொகுதிகளைப் பெறுவதற்கு இவ்வளவு தொகை கொடுத்து 20 எம்.பிக்களை விலைக்கு வாங்கிவிடலாமே என்றும் கிண்டலடித்தார்களாம் பாஜக மேலிட பிரதிநிதிகள்.
கேப்டன் விதித்த நிபந்தனை பாஜகவை ஓடவைக்கவா? ஒப்புக் கொள்ளவா? என்பது ஓரிருநாட்களில் தெரியும் என்றும் கண்சிமிட்டுகின்றனர் தேமுதிகவினர்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications