முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாள்: குற்றாலத்தில் பாஜகவினர் அன்னதானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். குற்றாலம் நகர பாஜக சார்பில் குற்றாலநாதர் கோயிலில் சிறப்பு அபிஷகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய், இந்தியாவின் 10-வது பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரார் வாஜ்பாய்.

பாரத ரத்னா வாஜ்பாய்

பாரத ரத்னா வாஜ்பாய்

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வாஜ்பாஜ் தீவிர அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்தில், நேசத்திற்குரிய வாஜ்பாய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தனித்துவம் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைமை உலக அளவில் இந்தியாவை தலை நிமிரச்செய்தது. வாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அன்னதானம்

அன்னதானம்

குற்றாலம் நகர பாஜக சார்பில் குற்றாலநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமையாக
நகரத் தலைவர் செந்தூர் பாண்டியன் முன்னிலை திருமுருகன் நகர துணைத் தலைவர்
சிறப்பு அழைப்பாளர் எஸ்.வி அன்புராஜ் பங்கேற்றார்.

சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

கோட்ட இணை பொறுப்பாளர்
மாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன் ஒன்றிய பார்வையாளர் ராஜ்குமார் மாவட்ட எஸ்சி அணி பொதுக் செயளாளர் மகேஷ்வரன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அய்யர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன்
தென்காசி ஒன்றியத் தலைவர் அருணாசலம் காசிமேஜர்புரம் முத்து பாண்டியன்
அருன்ராஜ் ஹாரிதாஸ் மாரித்துரை ராமர் மாரிக் கண்னன் நாகராஜ் நகர பொதுச் செயளாளர் பலவேந்திரன் நன்றி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Bharatiya Janata Party workers performed havan on Monday in several parts of the nation on the birth anniversary of former prime minister Atal Bihari Vajpayee.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற