மதுரை எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதனால் வங்கிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியியின் தலைமை அலுவலகத்துக்கு, மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடப்பட்டது.

 Bomb threat given to Sbi Madurai and police searched, found nothing

இதனால் பதறிப்போன அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மதுரையில் உள்ள அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு சோதனை நடத்தினர். மோப்பநாய்களைக் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது.

ஆனால், மதுரையில் உள்ள எந்த எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளிலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டலை யார் விடுத்தது என்பதும் தெரியவில்லை.இதனால் மதுரையில் உள்ள அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளில் பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Some unknown person called head quarters of SBI in Chennai and told that In Madurai SBI banks, bombs placed. After this call, they gave complaint to police and they searched every where and nothing found.
Please Wait while comments are loading...