For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஞ்சாலிக்கு சேலை வழங்காமல் ஆன்லைனில் 'ஷாப்பிங் செய்த' கிருஷ்ணன்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பகவான் கிருஷ்ணர் திரவுபதியை காப்பதை விட்டுவிட்டு, செல்போனில் ஆன்லைன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்ததாக விளம்பரம் வெளியிட்ட பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

நேற்று கிருஷ்ண ஜெயந்தி. இதை வைத்து, வித்தியாசமாக ஒரு விளம்பரத்தை தயார் செய்யலாம் என நினைத்தது Myntra என்ற ஆன்லைன் ஆடை ஷாப்பிங் நிறுவனம்.

இது ஆடை அணிகலன்கள் விற்கும் நிறுவனம் என்பதால் அப்படி ஒரு யோசனை வந்தது அந்த நிறுவனத்திற்கு.., பாஞ்சாலி சேலையை பிடித்து துச்சாதனன் உருவி கொடுமைப்படுத்துவதை போலவும், அவருக்கு ஆடை வழங்க வேண்டிய கண்ணன், செல்போனில் Myntra அப்ளிகேஷனில் ஆடை பர்சேஸ் செய்து கொண்டிருப்பதை போலவும் விளம்பர படம் வெளியிட்டது அந்த நிறுவனம்.

இந்த விளம்பர படத்திற்கு, சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். சகிப்புத்தன்மையை இதுபோன்ற நிறுவனங்கள் ரொம்பவே சோதிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மேலும் #BoycottMyntra என்ற பெயரில் டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு, அந்த நிறுவனத்தில் ஷாப்பிங் செய்வதை தவிர்க்குமாறு நெட்டிசன்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கிலுள்ளது.

English summary
#BoycottMyntra trends in twitter as it's advertisement spark controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X