அரசு பஸ் டிரைவர்களுக்கும் கட்டாய ‘சீட் பெல்ட்’ வழக்கு: பதிலளிக்க அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

சமீபத்தில் கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிந்து தான் காரை ஓட்ட வேண்டும் என கட்டாயமாக்கியது தமிழக அரசு. அதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டப்படி கார் டிரைவர்கள் மட்டுமல்ல, பஸ் டிரைவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும். எனவே, அதற்கான வசதியை அவர்களுக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார் வழக்கறிஞார் பிரகாஷ் ராஜ் என்பவர்.
இது தொடர்பாக, சென்னை ஹைகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மோட்டார் வாகனச் சட்டப்படி....
மோட்டார் வாகன சட்டத்தின்படி கார் மற்றும் பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அவ்வாறு அணியாத கார் டிரைவர்களுக்கு சென்னை மாநகர போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
விபத்தில் சிக்கும் டிரைவர்கள்...
அதே நேரம் அரசு பேருந்து டிரைவர்களுக்கு ‘சீட் பெல்ட்' வசதி இல்லாமல் உள்ளது. இந்த பேருந்துகள் விபத்தில் சிக்கும்போது டிரைவர்கள் உயிரிழக்கின்றனர்.
தீயணைப்புக் கருவியும்....
எனவே மோட்டார் வாகன சட்டத்தின்படி தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளிலும் சீட் பெல்ட் மற்றும் தீயணைப்பு கருவி பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ்...
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications