தமிழகம்-கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்... பயணிகள் பரிதவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

  சென்னை: கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் பேருந்துகள் அந்த மாநில எல்லையில் நிறுத்துப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Buses stopped in TN- Kerala border because of strike

  நேற்று தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த ஸ்டிரைக் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகிறது.

  இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் மணிக்கணக்கில் பேருந்துக்காக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஆட்டோக்களை நாடும் மக்களுக்கு அவர்கள் கூறும் கட்டணத்தை கேட்டு அதிர்ச்சி ஏற்படுகிறது.

  இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  As the transport staffs are involving in bus strike, the buses plies from Kerala to Tamilnadu are stopped in border.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற