அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நல்ல சேதி- 7வது ஊழியக் குழு பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடந்த முதல் கூட்டம் இதுவாகும்.

Cabinet meeting to be held today

இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 20 சதவிகிதம் வரை சம்பளம் உயர்த்தப்படுகிறது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் நடத்தினர்.

இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசின் ஏழாவது ஊழியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cabinet meeting of the new State government headed by Chief Minister Edapadi Palanisami will be held at the Secretariat Chennai on Wednesday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற