ஓரிரு நாட்களில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் சீனிவேல் உயிரிழந்த காரணத்தால் அங்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

candidates list will be announced in one or two days, pon.radhakrishnan says

இதனிடையே, தேர்தல் ரத்தான மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மேலிடம் இறுதி செய்த பின்னர், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
by election bjp candidates list will be announced in one or two days, union minister pon.radhakrishnan says
Please Wait while comments are loading...