For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிட்டு வசந்தவேல்.. அங்கிட்டு குமரகுரு... விஜயகாந்த்துக்கு காத்திருக்கும் சவால்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக, தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட உள்ள திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மாற்றி கூடுதல் பலத்தோடு களமிறங்க வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணியிலுள்ள மனித நேய மக்கள் கட்சி, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் என்று தொகுதி பங்கீட்டின்போது அறிவிக்கப்பட்டது.

ஆனால், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டியிடுவார் என்ற தகவல் திமுக தலைமைக்கு ஒரு வாரம் முன்கூட்டியே தெரிந்துவிட்டது. மனிதநேய மக்கள் கட்சியால் விஜயகாந்த்தை சமாளிக்க முடியாது என கருதியே திமுக அத்தொகுதியை மனித நேய மக்கள் கட்சியிடம் இருந்து கேட்டு பெற்றது.

திமுக, அதிமுக

திமுக, அதிமுக

இதையடுத்து திமுக வேட்பாளராக திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேலுவை களத்தில் இறக்கி உள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குமரகுரு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

சிட்டிங் எம்.எல்.ஏ

சிட்டிங் எம்.எல்.ஏ

குமரகுரு சிட்டிங் எம்.எல்.ஏ என்பதால் இயல்பாகவே அவர் மீது தொகுதி மக்களில் கணிசமானோருக்கு அதிருப்தியிருக்கலாம். இதனால் விஜயகாந்த் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக திமுக அஞ்சுகிறது.

மாற்ற வாய்ப்பு

மாற்ற வாய்ப்பு

விஜயகாந்த்தை வீழ்த்தும் அளவுக்கு பிரபலமான ஒரு வேட்பாளரை உளுந்தூர்பேட்டையில் திமுக களமிறக்க வாய்ப்புள்ளது. வசந்தவேலு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இந்த தொகுதியில் திமுக தீயாய் வேலை செய்து விஜயகாந்த்தை வீழ்த்த கங்கணம் கட்டியுள்ளது.

திமுகவின் கோபம்

திமுகவின் கோபம்

திமுகவின் அதீத கோபத்திற்கு காரணம், எவ்வளவோ முயற்சி செய்தும், விஜயகாந்த் தங்கள் கூட்டணியில் சேராமல் முகத்தில் கரி பூசிவிட்டு மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து கொண்டதுதான்.

வசந்தவேல்

வசந்தவேல்

51 வயதாகும் ஜி.ஆர்.வசந்தவேல், பி.இ படித்துள்ளார். சொந்த ஊர், திருநாவலூர் ஒன்றியத்திலுளள எலவத்தடி. தந்தை பெயர் ராஜவேல், தாயார் பெயர் கவுசலை. இவருக்கு குணசுந்தரி என்ற மனைவியும், சந்திரபோஸ், ராஜசேகர், ஸ்ரீபாக்கியா என்ற குழந்தைகளும் உள்ளனர்.

குமரகுரு

குமரகுரு

2011 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வென்றவர்தான், தற்போதைய அதிமுக வேட்பாளரான குமரகுரு. அந்த தேர்தலில் குமரகுரு 114794 வாக்குகளை பெற்றார். இவரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது யூசுப். அவர் பெற்ற வாக்குகள் 61286.

கட்சி பதவி

கட்சி பதவி

1962ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி பிறந்த குமரகுரு, அதிமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர்.

English summary
Candidates who are to contest against Vijayakanth in Ulundurpet, from DMK and AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X