For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் விதி மீறல் வழக்கு: திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நடிகை குயிலி வழக்கு ஒத்திவைப்பு!

Google Oneindia Tamil News

Case against actress Kuyili adjourned to January
நாகை: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, விதிமுறைகளை மீறி அனுமதி பெறாத இடங்களிலும் பிரச்சாரம் செய்ததாக அதிமுக நடிகை குயிலி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் கோபால். இவருக்கு ஆதரவாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி, திருத்துறைப்பூண்டியில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நடிகை குயிலி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, புதிய பஸ் நிலையம் அருகில் மட்டும் அனுமதி பெற்று விட்டு, நகர் முழுவதும் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இது தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் உதவி அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்புகாரின் அடிப்படையில், நடிகை குயிலி மற்றும் வீடு கட்டும் சங்கத் தலைவர் அன்பரசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குயிலி மற்றும் அன்பரசன் இருவரும் ஆஜராகாததால், வழக்கை வரும் ஜனவரி மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவா உத்தரவிட்டார்.

English summary
The Thiruthuaipoondi court has adjourned the code of conduct violation case against actress Kuyili to next January
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X