பாஜகவின் காலில் விழுந்து பஜனை பாடும் அரசாக உள்ளது - ஸ்டாலின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு பாஜகவிற்கு லாலி பாடுகிற ஆட்சியாக, காலில் விழுந்து பஜனை பாடுகிற செயல்படுகிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தடைக்கு எதிராக மேகாலயா,கேரளா,புதுச்சேரி மாநிலங்களில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் பசுவதைத் தடைச் சட்டம் 40 ஆண்டுகாலமாக அமலில் உள்ளது என்றார். மக்களின் கருத்துக்களைக் கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநடப்பு

வெளிநடப்பு

முதல்வரின் பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

தீர்மானம் தேவை

தீர்மானம் தேவை

சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் தேவை என்று ஸ்டாலின் கூறினார்.

குந்தகம் விளைவிப்பதா?

குந்தகம் விளைவிப்பதா?

மேலும் தமிழக முதல்வர் எதோ ஒரு அறிக்கையை படித்து விட்டு அமர்ந்து விட்டார் என்றும் பாஜக காலில் விழுந்து பாஜனை பாடும் அரசாக எடப்பாடி பழனிச்சாமி அரசு உள்ளது. மாநிலத்துக்கு குந்தகம் விளைவிக்கிறது அதிமுக அரசு என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கண்டனம் இல்லையே

கண்டனம் இல்லையே

மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசுக்கு கண்டனம் கூற தெரிவிக்கவில்லையே என்றார். மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடைக்கு கோவா, புதுச்சேரியில் இறைச்சி தொடர்பான மத்திய அரசு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெய்டுக்கு அச்சம்

ரெய்டுக்கு அச்சம்

திமுக. காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியினர் குரல் எழுப்பினோம். முதல்வர் பதில் சரியாக சொல்லவில்லை. சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர அரசு ஏன் தயங்குகிறது ? மத்திய அரசின் ரெய்டுகளுக்கு அஞ்சி தமிழக அரசு செயல்படுகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK stages walkout from assembly citing TamilNadu govt failure to bring resolution against central notification on cattle ban
Please Wait while comments are loading...