தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஆகிய காரணங்களால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

Cauvery delta will get heavy rain: Chennai Meteorological center

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் மேற்கு பருவமழை இன்னும் நிறைவடையவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை இதுவரை தொடங்கவில்லை என்றும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain will continue in Tamilnadu and puducherry for two more days. Cauvery delta will get heavy rain said Chennai Meteorological center.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற