காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிப்பு.. ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை!
சென்னை: கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு 50,000 கன அடி நீர் வரும் நிலையில், ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 20,338 கன அடியாக உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், பிரதான அருவி, சினிஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அப்போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற சூழல் உள்ளது.
மேலும், கே.ஆர்.எஸ் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்வரத்து 1 லட்சம் கன அடியை தாண்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையில் உபரி நீா் திறக்கப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், காவிரி ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடுவதால், காவிரி ஆற்றில் குளிக்கவும், பாிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 20,338 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications