For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை குட்கா: அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்வதே நியாயம் - ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்திருக்கவேண்டும்-ஸ்டாலின்- வீடியோ

    கோவை: குட்கா ஆலை விவகாரத்தில் நியாயமாக பார்த்தால் அமைச்சர் வேலுமணி, எஸ்.பி மூர்த்தி ஆகியோர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசும்போது, குட்கா ஆலை விவகாரத்தில் நியாயமாக பார்த்தால் அமைச்சர் வேலுமணி , எஸ்.பி மூர்த்தி ஆகியோர் மீதுதான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும், ஆனால் , நியாயத்திற்கு போராடியதிற்கு திமுக மீது வழக்கு போட்டு கைது செய்தது சர்வாதிகாரம் போன்றது என்றார்.

    Cbe Dmk Stalin

    மேலும் குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சிறைக்கு செல்வதை மறைப்பதற்காக இதெல்லாம் நடைபெறுவதாகவும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்து வரும் தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    குட்கா ஆலைக்குள் காவல்துறை அதிகாரிகள் மட்டும் 5 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தது குறித்த கேள்விக்கு , காவல்துறை தலைவரே இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரை காப்பாற்ற இது போன்ற நாடகம் நடத்தப்படுகிறது என்றார். தொடர்ந்து, குட்கா விவகாரத்தில் உள்ளூர் அமைச்சருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நிச்சயமாக சம்பந்தம் உள்ளது என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

    English summary
    MK Stalin, DMK activist, said the kovai Gudkha issue should be registered only on the case of Minister Valuamani and S Murthy. So, the CBI should take up the matter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X