வங்கிப் பணம் ரூ.65 கோடி மோசடி.. சென்னை, கோவையில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு
எஸ்.பி.ஐ. வங்கியில் 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக கோவை, சென்னையில் 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோவை: கோவையில் வங்கிப் பணம் ரூ.65 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த அசோக், பாலாஜி, நாகேந்திரன், மனோகரன் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கியில் 65 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால் பணத்தை திருப்பி செலுத்தாதால் அவர்கள் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.,க்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்நிலையில் கோவை பெரிய கடை வீதியில் உள்ள அசோக்குமார் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னை, கோவையில் உள்ள 5 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இந்த வழக்கு தொடர்பாக அசோக், பாலாஜி, நாகேந்திரன் மற்றும் மனோகரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications