Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காப்பு காட்டில்" புகுந்த ஜோடி.. அந்த பெண்ணுக்கு குழந்தை வேற இருக்கு.. மானமே போச்சே.. சேலஞ்சிங் கேஸ்

காப்புக்காட்டில் நடந்த கொலையில் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: கடந்த 2 நாட்களாகவே காவேரிப்பாக்கம் பெண்ணின் கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கைதானவர் தந்துள்ள வாக்குமூலம், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... மேலும், சவாலான இந்த வழக்கை, விரைந்து முடித்துள்ளனர் ராணிப்பேட்டை போலீசார்.

காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்... இவரது 3வது மகள் ரேஷ்மாலதா.. 21 வயதாகிறது.. இவரது கணவர் கோபிநாத்..

2 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.. தலைப்பிரசவத்துக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.. குழந்தை பிறந்த நிலையில்,கணவர் வீட்டுக்கு செல்லாமல் அம்மா வீட்டிலேயே தங்கியிருந்தார்.

 மிதந்த சடலம்

மிதந்த சடலம்

இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி வெளியே செல்வதாக சொல்லிவிட்டு சென்ற ரேஷ்மாலதா, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.. இதனால் பதறிய பெற்றோர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் தந்தனர்.. இறுதியில் போலீசார், ஒரு கால்வாயில் ரேஷ்மாலதா சடலத்தை மீட்டு விசாரணையையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான் குமரன் என்பவர் பெயர் அடிபட்டது.. இவருக்கு 28 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்தவர் இந்த குமரன்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

போலீசில் அவர் தந்த வாக்குமூலம் தந்துள்ளார்.. அதன்படி, 4 வருடங்களுக்கு முன்பு, குமரனும், ரேஷ்மாலதாவும் காதலித்து வந்துள்ளனர்.. இவர்கள் காதலுக்கு, ரேஷ்மா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.. அதனால், கோபிநாத் என்பவருக்கு ரேஷ்மாவை திருமணம் செய்து வைத்துவிட்டனர்.. ரேஷ்மா 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது மீண்டும் குமரனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள்..

 ஜாலி + உல்லாசம்

ஜாலி + உல்லாசம்

இந்த சமயத்தில்தான் ரேஷ்மா, பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 22ம்தேதி ரேஷ்மா, குழந்தையை வீட்டில் விட்டுட்டு, குமரனை சந்திக்க காப்புக் காட்டுக்குள் சென்றுள்ளார். அங்கே இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.. அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி குமரன் ரேஷ்மாவை கட்டாயப்படுத்தினாராம்.. தனக்கு குழந்தை இருப்பதால், இன்னொரு கல்யாணம் முடியாது என்று ரேஷ்மா சொல்லி உள்ளார்.. இதனால், ஆத்திரமடைந்த குமரன், ரேஷ்மாவை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.

 டவர் சிக்னல்

டவர் சிக்னல்

இந்த வழக்கை பொறுத்தவரை, ரேஷ்மா காணவில்லை என்று புகார் தந்ததில் இருந்தே, போலீசாருக்கு நிறைய சவால்கள் எழுந்தன. சாத்தம்பாக்கம் காட்டுப்பகுதி, கால்வாயில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்து அங்கு போலீசார் சென்றுள்ளனர்.. ஆனால், தண்ணீரில் உடல் ஊறிவிட்டிருந்ததால், அழுகின நிலையிலேயே சடலத்தை கைப்பற்றினர்.. அதற்கு பிறகு, போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துவிட்டு, அந்த மாவட்டத்தில் யாரெல்லாம் இளம்பெண்கள் காணாமல் போயுள்ளார்கள் என்ற லிஸ்ட்டை எடுத்தனர்.. அப்போதுதான், இறந்துபோனது ரேஷ்மா என்பது தெரியவந்தது.

கர்ப்பமாம்

கர்ப்பமாம்

உடனே சடலம் கண்டெடுத்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோதுதான், ராணிப்பேட்டை அருகேயுள்ள ஒருவருன் பைக்கில் செல்வது பதிவாகி இருந்தது.. பிறகு பைக் நம்பரை வைத்து, அந்த நபர் யார் என்று கண்டுபிடித்தபோதுதான், குமரன் சிக்கி உள்ளார்.. இந்த குமரனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாம்.. அந்த பெண் இப்போது கர்ப்பமாக இருக்கிறாராம்.. திடீரென ரேஷ்மாவுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டதால், ரேஷ்மாவுக்கும் கணவர் வீட்டுக்கு செல்ல மனமில்லாமல் பிரசவம் முடிந்தும் அம்மா வீட்டிலேயே இருந்துள்ளார்.

 சேலஞ்ச்

சேலஞ்ச்

கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும் சொல்லி வந்துள்ளார். அதேசமயம், குமரனை 2வது திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தராமல் இருக்கவும்தான் குமரன் கொலை வரை சென்றதாக சொல்கிறார்கள்.. செல்போன் சிக்னலின் உதவியுடன்தான் குமரனை பிடிக்க நேர்ந்தது.. கால்வாயில் அழுகிய நிலையில் கண்டெடுத்த அடையாளம் தெரியாத சடலத்தை வைத்து, போலீசார் இந்த வழக்கை சவாலாக எடுத்து முடித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+