மதவேற்றுமை போயே போச்சு.. இந்திய வெற்றிக்காக நாடு முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை, தொழுகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நாளை இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ளதால், நாடு முழுக்க இந்திய வெற்றிக்காக மக்கள் மத வேற்றுமை கடந்து பிரார்த்தனைகள் நடத்தி வருகிறார்கள்.

2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பிறகு ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் இப்போதுதான் இந்தியா-பாகிஸ்தான் நேரடியாக மோதுகிறது. இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Champions trophy 2017: People in Varanasi hold a special prayer for India's victory over Pakistan

கிரிக்கெட் போட்டியை ஒரு யுத்தம் போல நினைக்கிறார்கள் வட இந்தியர்கள். எனவே அவர்கள் இந்தியாவின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.

பாகிஸ்தான் தோற்று இந்தியா வெல்ல வேண்டும் என உ.பி. வாரணாசியில் முஸ்லிம்கள் பேட், பந்துகளை வைத்து சிறப்பு தொழுகை செய்த காட்சிகளை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெண்களும் சிறப்பு தொழுகைகள் செய்துள்ளனர்.

இதேபோல நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள், தொழுகைகள் என களைகட்டியுள்ளது கிரிக்கெட்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People in Varanasi hold a special prayer for India's victory over Pakistan in Champions Trophy finals.
Please Wait while comments are loading...