சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 Chances of getting Moderate Rain in Tamilnadu says Chennai Meteorological centre

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடியில் 3மிமீ மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chances of getting Moderate Rain in Tamilnadu says Chennai Meteorological centre.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற