For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆற்றுக்குள் மணல் அள்ளும் அதிமுக காண்ட்ராக்டர்: அதிமுக எம்.எல்.ஏவே புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மானாமதுரை: மானாமதுரை அருகே தடுப்பணை கட்டுவதற்காக ஆற்றுக்குள்ளேயே மணல் அள்ளுவதாக அதிமுக காண்ட்ராக்டர் மீது அதிமுக எம்.எல்.ஏ ஒருவரே பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேதியேரேந்தலில் சுமார் 16 கோடி செலவில் வைகை ஆற்றின் இருப்பக்கமும் விவசாயகளின் நலனுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருகின்றது.

2013 சட்டபேரவை கூட்ட தொடரில் மானாமதுரை அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரன் கொண்டுவந்து அதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்து பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த வேலைகளை மதுரை மாவட்ட அ.திமு.க மாணவரணி செயலாளர் மாணிக்கம் என்பவர் காண்டராக்டர் வேலை எடுத்து செய்து வருகிறார்.

ஆற்றில் அள்ளப்படும் மணல்

ஆற்றில் அள்ளப்படும் மணல்

ஆனால் இந்த பணிக்கு மணல்கள் வெளியில் இருந்துதான் எடுத்து வரவேண்டும் ஆனால் ஆற்றுக்குள்ளேயே மண் எடுத்து கரை அமைத்து வருகின்றனர். இதனையடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரன், அதிகாரிகளிடம் மூன்று புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

கவுன்சிலர்கள் மறியல்

கவுன்சிலர்கள் மறியல்

இதனிடையே வியாழக்கிழமை மானாமதுரை பேரூராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் 11 பேரும் அதேபோல் தி.மு.க கவுன்சிலர்கள் 7 பேரும் மொத்தம் 18 பேர் ஆற்றுக்குள் மண் அள்ளி கொண்டிருந்த லாரிகள் பொக்லைன் இயந்திரங்களை மறித்து மறியல் செய்தனர்.

கவுன்சிலர்கள் புகார்

கவுன்சிலர்கள் புகார்

சுமார் 15 அடி ஆழத்திற்கு ஆற்றின் மண்அள்ளியதாக கவுன்சிலர்கள் புகார் கூறினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எந்த பலனும் ஏற்படவில்லை. கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியவில்லை ஆற்றில் மண்அள்ளுவதற்து யார் அதிகாரம் கொடுத்தது அப்படியே கொடுத்திருந்தால் ஆர்டர் காப்பியை கொடுங்கள் என்றனர் ஆனால் கொடுக்கவில்லை.

கவுன்சிலர்கள் முற்றுகை

கவுன்சிலர்கள் முற்றுகை

உடனே டென்ஷன் ஆன காண்ட்ராக்டர் மாணிக்கம், கவுன்சிலருக்கும் தாசில்தாருக்கும் காசு பணம் கொடுத்துள்ளேன் என்றும் இன்னும் நான் எவ்வளவு பேர்க்குதான் கப்பம் கட்ட வேண்டும் என்றார். உடனே கவுன்சிலர்கள் 18 பேரும் எந்த கவுன்சிலர்க்கு பணம் கொடுத்த இப்போதே கூற வேண்டும் என்றும் அவரை சூழ்ந்தனர். கவுன்சிலர்கள் மண் அள்ளும் லாரிகளை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூறினர்.

மிரட்டிய காண்ட்ராக்டர்

மிரட்டிய காண்ட்ராக்டர்

உடனே இன்ஸ்பெக்டர் ரமணி லாரிகளை ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். உடனே மாணிக்கம் அதிகார தோரணையில் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்து லாரியை கொண்டு சென்று விடுவீர்களா என் மரியாதை என்னாகும் என்று அதிகார தோரணையில் பேசினார். உடனே போலிசார் கவுன்சிலர்களை புகார் கூறுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினர் அதுவரைக்கும் மண் அள்ளகூடாது அதுவரைக்கும் அந்த இடத்தை விட்டு நகர கூடாது என்று உத்தரவிட்டனர்.

எம்.எல்.ஏ எச்சரிக்கை

எம்.எல்.ஏ எச்சரிக்கை

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 27 ம் தேதி சந்தைக் கடை முன்பு அதிமுக பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ குணசேகரன் பேசும் போது இந்த தடுப்பணை திட்டத்தை விவசாயிகள் நலனுக்காக முதல்வர் கொண்டு வந்தார்.

ஆனால் இந்த திட்டத்தை தடுப்பதற்கு அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இந்த திட்டத்தை கெடுப்பதாக குற்றம் சாட்டினார்.

ஓய்வு பெறமுடியாது

ஓய்வு பெறமுடியாது

6 முறை ஆற்றை அளந்தும் இதுவரை எந்த அதிகாரிகளும் பதில் கொடுக்கவில்லை. நில அளவையர்களும் சரியாக அளக்கவில்லை என்று பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியே சென்றால் அவர்களை ஓய்வே பெற முடியாமல் நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களை எச்சரிக்கிறேன் என்று கூறினார். மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏவிற்கும் அதிமுக மாணவரணி செயலாளருக்கும் இடையே உருவாகியுள்ள புகைச்சல் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A building contracto who is also a ADMK man is in trouble as lots of charges are piling up on him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X