For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ் ஸ்டிரைக்கிற்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்க மறுப்பு

பஸ் ஸ்டிரைக்கிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

    மதுரை: பஸ் ஸ்டிரைக்கிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் மதுரையில் தாமாக வந்து விசாரிக்க வேண்டும் என்பதை அந்த நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.

    2.57 சதவீதம் ஊதிய உயர்வு கோரி கடந்த 3 மாதங்களாக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படாததால் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Chennai HC's Madurai branch refused to hear the transport staffs strike

    இதனால் பஸ் இயக்கம் இல்லாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்றைய தினம் பயணிகள் நடு வழியில் இறக்கப்பட்டதால் இரவு நேரத்தில் பெண்கள், மாணவர்கள், மாணவிகள், பெரியவர்கள் என அவதிப்பட்டனர்.

    பொங்கல் பண்டிகை வேறு நெருங்குவதால் இந்த ஸ்டிரைக் குறித்து சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் மதுரைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கை தொடுத்தார். அதில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    பஸ் ஸ்டிரைக்கிற்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பித்தும் அதை தமிழக அரசு செய்யவில்லை.

    போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

    English summary
    Chennai HC's Madurai branch refused to hear the transport staffs strike throughout TN demanding hike in Salary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X