போராட்டத்தை கைவிடாவிட்டால்... ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களை கடுமையாக எச்சரித்த கோர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆசிரியர்களை எச்சரிக்கும் உயர்நீதி மன்றம்! | Oneindia Tamil

மதுரை: ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் போராட்டத்தை கைவிடாவிட்டால் அப்புறப்படுத்தப்படுவார்கள் என ஹைகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்தை கைவிட சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டும் அரசு ஊழியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 3 நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜராகினர். அப்போது 3 நீர்வாகிகளிடமும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

 ஏன் தொடர்கிறீர்கள்?

ஏன் தொடர்கிறீர்கள்?

போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏன் போராட்டத்தை தொடர்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 வாபஸ் பெற்ற பின்னரே பேச்சு

வாபஸ் பெற்ற பின்னரே பேச்சு

வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற பிறகே அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

 உடனே பணிக்கு திரும்பவேண்டும்

உடனே பணிக்கு திரும்பவேண்டும்

மேலும் போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 அப்புறப்படுத்தப்படுவார்கள்

அப்புறப்படுத்தப்படுவார்கள்

இதனையடுத்து அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

 உடனே வெளியேற வேண்டும்

உடனே வெளியேற வேண்டும்

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் ஊழியர்கள் உடனே வெளியேற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

 போராட்டம் வாபஸ்

போராட்டம் வாபஸ்

இதையடுத்து அரசு ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai high court madurai bench warns govt staffs to withdraw strike. The Jacto jeo withdraw their strike.
Please Wait while comments are loading...