துணிகளால் நிரம்பி வழிந்த சென்னை மொட்டை மாடிகள், பாஜக பொதுக்கூட்டம் போல திடீர் காலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் பல பகுதிகளில் காலையில் வெயில் அடித்த நிலையில், சேர்ந்துவிட்ட அழுக்கு துணிகளையெல்லாம் மக்கள் துவைக்க தொடங்கினர். ஆனால் மீண்டும் மழை வந்ததால் காயப்போட்ட துணிகள் நிலைமை அதோகதியானது.

பேச்சுலர்ஸ் உட்பட பல தரப்பினரும், ஞாயிற்றுக்கிழமைகளில்தான் துணிகளை துவைத்து காயப்போடுவது வழக்கம். இன்று காலையில் வெயில் பளிச்சென்று அடித்ததால், ஆசையோடு ஒருவாரமாக சேர்ந்த துணிகளை துவைத்து மொட்டை மாடிகளில் காயப்போட்டனர் மக்கள்.

Chennai houses Top floors looks like BJP rally places

செயற்கைக்கோளில் இருந்து சென்னையை படம் எடுத்தால், துணிகளே வீடுகளை மறைத்துவிடும் என்ற அளவுக்கு எல்லோர் வீட்டு மொட்டை மாடிகளிலும் துணிகள்தான் கிளிப் மாட்டப்பட்டு தொங்கின.

ஆனால், காலை 10.30 மணியளவில் குரோம்பேட்டை, வளசரவாக்கம் என பல பகுதிகளில் நல்ல மழை கொட்டத்தொடங்கியது. அவசரம் அவசரமாக மக்கள் துணிகளை எடுத்து வீட்டுக்குள் கொண்டு ஓடினர்.

Chennai houses Top floors looks like BJP rally places

இதைப் பார்க்கும்போது, பாஜக பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக கிடப்பதை போல உள்ளது என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
When rain has come Chennai people take away their dress materials to inside home. Top floors looks like BJP rally place.
Please Wait while comments are loading...