செம்ம கூல் மச்சி சென்னை.. காலையிலிருந்து குளிர்ந்த காற்று.. கூடவே சின்னதாக தூறல்!
சென்னையில் கடந்த 2 நாள்களாக கொளுத்தி வந்த வெயில் அடியோடு காணாமல் போய் தற்போது கிளைமேட்டே ஜில்லென்று ஆகிவிட்டது.
Recommended Video

சென்னை: சென்னையில் 2 நாள்களாக மழை ரெஸ்ட் எடுத்து வந்த நிலையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செம கூலாக உள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. அதுவும் சென்னையை பொருத்தவரை கடந்த 30-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை வெளுத்து வாங்கியது.
ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 6-ஆம் தேதிக்கு பின்னர் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வெயில் அடித்தது
இதையடுத்து கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையில் வெயில் நிலவியது. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னையில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.

நார்வே வானிலை மையம்
அதேபோல் சென்னையில் வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்தது. மேலும் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையமும் தெரிவித்துள்ளது.

கூல் கூல் சென்னை
சென்னையில் இன்று காலை முதலே ஜில்லென்று காற்று வீசத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் லேசான தூறலும் இருந்தது. இதனால் சென்னையே ஒரு ஊட்டி போல் காட்சியளிக்கிறது. இந்த கிளைமேட்டால் மக்களுக்கு மகிழ்ச்சி என்ற போதிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வெள்ள நீர்
சென்னையில் மேலும் மழை புகுந்து விளையாடும் என்ற அறிவிப்புகளால் சில பகுதியை சேர்ந்த மக்கள் மீண்டும் தண்ணீர் சூழும் நிலை ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர். ஏற்கெனவே பெய்த மழையால் தண்ணீர் வடியாத நிலையில் தற்போது மீண்டும் கனமழையா என்று விழிபிதுங்குகின்றனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications