இனி.. மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு சர்ருன்னு ஷட்டில்ல போகலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலைய மெட்ரோ ஸ்டேஷனில் இலவச ஷட்டில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மூன்று வழித்தடங்களில் செயல்படுகிறது. அதாவது ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஒன்றும், சின்னமலையில் இருந்து சென்னை ஏர்போர்ட் வரை ஒரு சேவையும் மற்றொன்று சென்னை திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையும் இயக்கப்படுகிறது.

chennai metro rail Free Shuttle Services from Airport Metro Station to Chennai Airport

இவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் பயணிகளின் வசதிக்காக ஷட்டில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இருந்து பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே பல மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச சைக்கிள் சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
chennai metro rail Free Shuttle Services are available at Airport Metro Station for passengers to get to Chennai Airport.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற