புத்தாண்டு கொண்டாட்டம்.. நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடுகளை அள்ளிவிட்ட சென்னை காவல்துறை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களை வரும் 31ஆம் தேதி நள்ளிரவு 1 மணியுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய நீடிக்கும். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் பீச், கிழக்கு கடற்கரை சாலை என புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும்.

இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டு விடைபெற்று 2018 புத்தாண்டு நாளை மறுநாள் இரவு பிறக்கிறது.

போலீஸ் கட்டுப்பாடுகள்

போலீஸ் கட்டுப்பாடுகள்

இதனை முன்னிட்டு சென்னையில் நட்சித்திர ஹோட்டல், கேளிக்கை விடுதி நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். அப்போது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்தனர்.

ஒரு மணியுடன் முடிக்கனும்

ஒரு மணியுடன் முடிக்கனும்

அதன்படி வரும் 31ஆம் தேதி இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

மேடை அமைக்க தடை

மேடை அமைக்க தடை

மேலும் நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளில் நீச்சல் குளங்களை திறந்து வைக்கவும், அதன்மீது மேடை அமைக்கவும் சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.

பத்திரமாக அனுப்பி வைக்கனும்

பத்திரமாக அனுப்பி வைக்கனும்

மது மயக்கத்தில் இருப்பவர்களை விடுதி நிர்வாகம் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனுப்பப்பட்டவர்கள் குறித்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை தெவித்துள்ளது.

தண்ணீரை வெளியேற்ற வேண்டும்

தண்ணீரை வெளியேற்ற வேண்டும்

வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றி நீச்சல் குளத்தை மூடி வைக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

காவல்துறை எச்சரிக்கை

காவல்துறை எச்சரிக்கை

காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Chennai Police has imposed restrictions on the star and entertainment hotels in Chennai for New Year celebrations on the 31st of the night.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற