For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை- சென்னை போலீஸ் எச்சரிக்கை

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை போலீஸ் எச்சரித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    செப்டெம்பர் 1 முதல் ஒரிஜினல் ஒட்டுஉரிமம் கட்டாயம்-வீடியோ

    சென்னை: அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வாகனங்களை ஓட்டுவோர் அசல் ஓட்டு உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    Chennai police warns over Original Driving License

    இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பு:

    சென்னையில் செப்.1 முதல் வாகனங்களை ஓட்டும்போது, அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறையுடன் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Chennai traffic police warned that a fine of Rs.500 with 3 months Jail term if people do not have their Original Driving License while driving from September 1st.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X