தமிழகத்தில் கன மழை.. சென்னை உள்பட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை. திருவாரூர், தஞ்சை
மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30-ஆம் தேதி தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்று முதல் இரு நாள்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்தது. இந்நிலையில் 30-ஆம் தேதியான நேற்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டியது.

 Chennai Schools holiday on Tomorrow: Collector replies

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது.

இதையடுத்து காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவும், திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியும், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டனர்.

இதேபோல் சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பிரமணியன் விடுமுறை அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ராமேஸ்வரம் பாம்பனிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai collector Anbu Selvan says that he is not taking any decision about schools in Chennai holiday on tomorrow.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற