சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கன மழை இன்றும் தொடர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை வேலூர் மற்றும் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய வட கிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது.

Chennai, Tirvallur, Kanchi, Nagai Schools to be closed Today

நேற்று ஞாயிற்றுக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்தது. எனவே இன்று திங்கள்கிழமை பள்ளிகள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகாலையிலிருந்தே மழை கொட்டியது.

இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அதிகாலையில் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, வேலூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இதுவரை 9 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai, Tirvallur, Kanchipuram, Cuddalore, Thiruvannamalai, Viluppuram, Thiruvarur and Nagapattinam districts Schools will be closed Today due to heavy rain.
Please Wait while comments are loading...