சென்னை மக்களே 3 நாள்களுக்கு கனமழையாம்... நார்வே வானிலை மையம் சொல்லிடுச்சி பாத்துக்கோங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு தேவையான மழைப் பொழிவை கொடுப்பது வடகிழக்கு பருவமழையாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். கடந்த 30-ஆம் தேதி தீவிரமடைந்து ஒரு வாரத்துக்கு மேல் தமிழகத்தில் வெளுத்து வாங்கியது.

அதிலும் சென்னையில் பெய்த கனமழையால் ஆங்காங்கே நீச்சல் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர்.

வெயில் காய்ந்தது

வெயில் காய்ந்தது

கடந்த சில நாள்களாக சென்னையில் மழை சற்று ஓய்ந்து வெயில் காய்ந்து வந்தது. ஆனால் நேற்று முந்தைய தினம் சென்னையில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கனமழைக்கு வாய்ப்புண்டு

கனமழைக்கு வாய்ப்புண்டு

சென்னையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று நார்வே வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் அறிக்கை கடந்த 2 ஆண்டுகளாக பொய்த்து போனது என்பது கூடுதல் தகவலாகும்.

கனமழை

கனமழை

இன்று காலை தொடங்கும் இந்த மழை இரவு 12 மணி வரை ஓயாமல் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மழை திங்கள்கிழமை இரவு 12 மணி வரை தொடருமாம்.

மிதமான மற்றும் கனமழை

மிதமான மற்றும் கனமழை

செவ்வாய்க்கிழமையும் விடாமல் மழை பெய்யும். இந்த மழை மாலை 6 மணிக்கு பிறகு சற்று ஓய்வெடுக்கத் தொடங்கும். புதன்கிழமையிலிருந்து வெயில் காயத் தொடங்கும் என்று அந்த அறிக்கை கணிப்பு கூறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Norway Weather Report says that Chennai will get heavy rainfall which starts from today and ends on Tuesday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற