கனகசபையில் யாரும் ஏறக்கூடாது.. போர்டை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் சிதம்பரம் தீட்சிதர்கள் வாக்குவாதம்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பொதுமக்கள் வழிபட தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது தீட்சிதர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி வழிபட பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் சென்ற நிலையில், அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.
இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் வரவேற்பு இருந்த நிலையில், அனைத்து நாட்களிலும் பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிப்பது இல்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் திருத்தேர் விழாவையொட்டி, கனகசபையில் பொதுமக்கள் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாகக் கோவில் தீட்சிதர்கள் கனகசபை வாயிலில் அதற்கான பதாகையை வைத்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு நாளை திருத்தேர் நடக்க இருக்கிறது. இதனால் திருவிழா முடியும் வரை, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தீட்சிதர்களின் இந்த அறிவிப்பு தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது என்பதால், இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறையினர் பதாகையை அகற்ற வந்தனர்.
அப்போது, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் தீட்சிதர்கள் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
செயல் அலுவலர் சரண்யா, தீட்சிதர்கள் முற்றுகையிட்டு கூச்சலிட்டதை சமாளிக்க முடியாமல் கோயிலில் இருந்து திரும்பிச் சென்றனர். இதையடுத்து காவல் துறையில் தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து சிதம்பரம் நகர காவல்துறையினர் தீட்சிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications