சேலத்தில் அம்மா பூங்காவை திறந்து வைத்து ஷட்டுல் கார்க் விளையாடிய முதல்வர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: அம்மா பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்த இளைஞர்களுடன் அவர் இறகுப்பந்து விளையாடினார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். காலையில் சேலம்- பெங்களூரு சாலையில் இரும்பாலை சந்திப்பில் ரூ.21.97 கோடியில் மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

Chief minister Edappadi palanisami opens Amma park in Salem

இதைத்தொடர்ந்து பேசிய அவர் சேலம், மதுரை, கோவையில் ஏர்போர்ட்டை போல பஸ் போர்ட் அமைக்கப்படும் என்றார். சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளியில் அம்மா பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறகு பந்து விளையாடினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief minister Edappadi palanisami opens Amma park in Salem. After opening the park Edappadi palanisami played Shuttle cork with youngsters.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற