For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவெடுத்த நிலையில் பொங்கல் போனஸை அறிவித்த ஓ.பி.எஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்துள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

பொங்கள் போனஸ் கோரி மாவட்ட அளவில் போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் சங்கம் முடிவெடுத்து அறிவித்த நிலையில் இந்த போனஸ் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் முதல்வர்.

CM announces Pongal bonus

இதுதொடர்பாக அரசு வெளியி்ட்டுள்ள அறிவிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவற்றை வழங்கியதைப் போலவே, இந்த ஆண்டும் வழங்கிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

1. 2013-2014 ஆம் ஆண்டிற்கு சி மற்றும் டி தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.

2. ஏ மற்றும் பி தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக் கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு 326 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CM O Pannerselvam has announced Pongal bonus for the staffs and teachers of TN Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X