சட்டசபை நிறைவு: ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 8ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை முடிந்த நிலையில் அதன் மீதான விவாதம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தன.

CM and Deputy CM went to Jayalalitha Memorial and paid tribute

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் சட்டசபையில் தனது பங்கிற்கு பேசினார். வெளிநடப்பு செய்து ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்நிலையில் ஆளுநர் உரையில், அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை குறித்தும், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதம் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். கடைசி நாளான இன்று எம்எல்ஏ ஊதிய உயர்வு மசோதா குறித்து காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM and Deputy CM went to Jayalalitha Memorial and paid tribut. As today the debate on governor speech is over they have paid the tribute

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற