For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யார் பேச்சையும் கேட்காதீங்க.. விரும்பியது நடக்கும்.. அதிருப்தியாளர்களுக்கு எடப்பாடியார் அட்வைஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    அணி மாற இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.... அதிர்ச்சியில் எடப்பாடி

    சென்னை: எடப்பாடி தரப்புக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. பேசாமல் அதிருப்திகளிடமே பேச்சை ஆரம்பித்து விட்டார்.

    ரிசல்ட்டுக்கு பிறகு அதிமுக கொஞ்சம் அமைதி காத்தே வருகிறது. ஒருபுறம் மத்திய அமைச்சரவையில் சீட் இல்லாமல் போய்விட்டதே, தமிழகத்துக்கு என்று ஒரு அங்கீகாரமே இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளோமே என்ற மனக்குமுறல் உலாவுகிறது.

    மற்றொரு பக்கம், திமுக படுவேகம் எடுத்து வருகிறது. அதனால் எப்போ, என்ன செய்யுமோ, ஆட்சிக்கு பாதிப்பு வருமோ, என்ற பீதியும் அடிவயிற்றில் கிளம்பி உள்ளது.

    தாராளங்கள்

    தாராளங்கள்

    இதற்கு நடுவில் அதிமுக எம்எல்ஏக்களை திமுக தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது என்ற தகவல் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. வெறும் முயற்சி என்றால்கூட பரவாயில்லையே, 10 எம்எல்ஏக்கள், 15 எம்எல்ஏக்கள் என்பது போலவும், இவர்களுக்கு கோடிக்கணக்கில் தாராளங்கள் காட்டப்படவும் திமுக தயாராக உள்ளதாகவும் செய்திகள் கசியவும் எடப்பாடி தரப்புக்கு வயிற்றில் புளியே கரைத்துவிட்டதுபோல் ஆகிவிட்டது.

    பெரிய தப்பு பண்ணிட்டார் தினகரன்.. சசிகலா பேச்சை மட்டும் கேட்டிருந்தால்.. ரேஞ்சே வேறு!பெரிய தப்பு பண்ணிட்டார் தினகரன்.. சசிகலா பேச்சை மட்டும் கேட்டிருந்தால்.. ரேஞ்சே வேறு!

    பொறுப்பாளர்கள்

    பொறுப்பாளர்கள்

    என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. நேற்று முதல்வர் திடீரென தனது வீட்டில் நிர்வாகிகளை வரவழைத்துவிட்டார், தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்களும் ஆஜர் ஆயினர். இதில் முதல்நபராக வந்து கலந்து கொண்டதே ஓபிஎஸ்தான்!

    பாஜக கோபம்

    பாஜக கோபம்

    தொகுதிகளில் நாம் எதற்காக தோற்று போனோம் என்ற முதல் கேள்வியில் இருந்து தொடங்கினார் முதல்வர். ஆளுக்கு ஒரு கருத்து, புகார், என அள்ளி வீசினார்கள். இதன்மூலம் எல்லாருமே அரசு மீது கோபமாக உள்ளனர் என்பது தெளிவானது. அதுமட்டுமில்லை.. எந்தஅளவுக்கு மக்களுக்கு பாஜக மீது கோபம் உள்ளது என்பதையும் முதல்வரால் அவர்கள் சொன்னதில் இருந்தே புரிந்து கொள்ள முடிந்தது.

    இடம் தர வேணாம்

    இடம் தர வேணாம்

    இருந்தாலும், நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆட்சி கவிழ்ப்பு, கட்சி தாவல் போன்ற சமாச்சாரங்களை பற்றியும் முதல்வரே நிர்வாகிகளிடம் விரிவாக பேசியுள்ளார். "நம்ம கட்சியில் இப்படியெல்லாம் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த சமயத்தில்தான் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஏற்கனவே தோற்று போயுள்ளதை எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவே முயற்சிப்பார்கள். அதுக்கு நாம இடம் தரக்கூடாது.

    அட்வைஸ்

    அட்வைஸ்

    உங்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கோ அதையெல்லாம் நானும் ஓபிஎஸ்-ம் பார்த்துக்கறோம். ஆனால் நம்ம அரசு எந்தவித தடங்கலும் இல்லாமல் 2 வருஷம் நடக்கணும். அங்க, இங்க தாவுவதால், மக்கள்கிட்ட மேலும் கட்சி பலவீனமடையாமல் பார்த்து கொள்ளுங்கள்" என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    முதல்வர் இப்படி கூப்பிட்டு வைத்து அறிவுரை சொல்லவும், கோபம், அதிருப்தியில் சென்ற நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு இழந்த பலம் திரும்பி வந்ததாம். தங்களால் முடிந்த ஒத்துழைப்பை தருகிறோம், ஆட்சிக்கு எதுவும் வந்துவிடாது என்று நம்பிக்கை தெரிவித்துவிட்டு கிளம்பி சென்றார்களாம்!

    English summary
    TN CM Edapadi Palanisamy and O Panneerselvam have asked dissidents to strengthen the AIADMK Party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X