அரசு விழாவில் கடைசி நேரத்தில் விஜயபாஸ்கரை கட் செய்த முதல்வர்! மோதல் உச்சகட்டம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்கிவிட்டு அவர் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார்.

அரசு மருத்துவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் வைபவம் இன்று காலை 9.30க்கு அரசு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமமனை வளாகத்தில் நடந்தது.

தேர்வான மருத்துவர்களுக்கான பணி ஆணைகளை முதல்வர் எடப்பாடி வழங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்குவதாகத்தான் நிகழ்ச்சி முடிவு செய்யப்பட்டிருந்தது.

விஜயபாஸ்கர் திடீர் மாற்றம்

விஜயபாஸ்கர் திடீர் மாற்றம்

ஆனால் நேற்று விஜயபாஸ்கர் மீது எழுந்த குட்கா லஞ்சம் குற்றச்சாட்டினால் விஜயபாஸ்கரை எடுத்துவிட்டு எடப்பாடியே பணி ஆணை வழங்குவதாக மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து

மேலும் அரசு விழாவாக நடத்தப்பட்ட இவ்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. இரண்டும் அரசு சுழாவில் புறக்கணிக்கப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

டிஸ்மிஸ் கோரிக்கை

டிஸ்மிஸ் கோரிக்கை

குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய ஊடகங்களிலும் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

நெருக்கடி

நெருக்கடி

விஜயபாஸ்கர், டிடிவி தினகரன் ஆதரவாளராக அறியப்படுகிறார். அவருக்கு எடப்பாடி தரப்பு, மத்திய அரசோடு சேர்ந்துதான் இப்படி நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi Palanichami avoides minister Vijayabashkar in government function as he is in controversy over Gutka issue.
Please Wait while comments are loading...