For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு அணிகள் இணைப்பு: இபிஎஸ் தலைமையில் இன்று அவசர கூட்டம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

அதிமுகவின் இரு அணிகளும் இணைய ஆகஸ்ட் 4ம் தேதி வரை 60 நாட்கள் காலக்கெடு விதித்தார் டிடிவி தினகரன். ஆனால் இரு அணிகளும் இணைவதாக தெரியவில்லை.

CM EPS to meet MLAS, ADMK functionaries today

வரும் 5ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து கட்சி பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம் தினகரன். தினகரன் வருகை இரு அணியினரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அவர் வந்தால் தேவையில்லாத குழப்பம், பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறார்கள்.

காலக்கெடு முடிய 3 நாட்களே உள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளை இணைப்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசி ஒரு முடிவு எடுக்க உள்ளார்களாம்.

English summary
CM EPS is meeting MLAs and ADMK district secretaries at ADMK headquarters in Chennai today. He is going to discuss about merging the two groups of ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X