For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்- முதல்வர்

நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நீட் விவகாரத்தில் விலக்கு கோரி தமிழக அரசு எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாகவும், அதிமுக எம்எல்ஏக்கள் 135 பேர் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

CM says TN govt had no other go but to opt NEET

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 109 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அனைத்து எம்எல்ஏக்களும் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். சில காரணங்களால் சில எம்எல்ஏக்கள் வர முடியவில்லை.

அதிமுக பதவியேற்றதில் இருந்து திமுக ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். நீட் விவகாரத்தில் விலக்கு கோரி தமிழக அரசு எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

English summary
CM Edappadi Palanisamy has said that TN govt had no other go but to opt NEET
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X