11 முறை காங்கிரஸ் கட்சி வென்ற மயிலாடுதுறை லோக்சபா தொகுதி- பெருமிதத்தை தக்க வைப்பாரா வழக்கறிஞர் சுதா?
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளராக நீண்ட இழுபறிக்குப் பின்னர் வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 11 முறை வென்ற தொகுதி மயிலாடுதுறை. இதனால் இம்முறையும் காங்கிரஸுக்கு வெற்றியை பெற்றுத் தருவாரா வழக்கறிஞர் சுதா என்பது எதிர்பார்ப்பு.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி முதலில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதனையடுத்து இழுபறிக்குப் பின்னர் நெல்லை தொகுதி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். அப்போதும் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை காங்கிரஸால் அறிவிக்க முடியவில்லை.

மயிலாடுதுறை வேட்பாளர் வக்கீல் சுதா: லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசிநாள். இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை வேட்பாளராக வழக்கறிஞர் சுதாவை அறிவித்தது காங்கிரஸ். மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான தமிழ்நாட்டில் பிறந்த பிரவீன் சக்கரவர்த்தி பெயரில் முதலிடத்தில் இருந்தது. இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற மணிசங்கர் அய்யர், அவரது மகள், திருச்சி தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்த திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரது பெயரும் மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இருந்தது. இந்த இழுபறிக்கு இடையேதான் தற்போது வழக்கறிஞர் சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கோட்டையான மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று சொல்லக் கூடிய அளவுக்கு 11 முறை அக்கட்சி வென்ற தொகுதி. மயிலாடுதுறையில் காங்கிரஸ் எம்பிக்களாக முதுபெரும் தலைவர் மறைந்த மரகதம் சந்திரசேகர், பக்கீர் முகமது, மணிசங்கர் அய்யர், பிவி ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். 1951-ல் இரட்டை உறுப்பினர் முறை அமலில் இருந்த காலத்தில் காங்கிரஸ் எம்பியாக சந்தானம் இருந்தார். பின்னர் தனித் தொகுதியாக மாற்றப்பட்ட போது 1962-ல் மகரதம் சந்திரசேகர் எம்பியாக இருந்தார். 1967, 1971-ல் திமுக தொடர்ந்து இத்தொகுதியில் வென்றது. 1977, 1980, 1984, 1989, 1991-ல் தொடர்ந்து காங்கிரஸ் மயிலாடுதுறையில் வெற்றி வாகை சூடியது. குடந்தை ராமலிங்கம் 2 முறையும் பக்கீர் முகம்மது 2 முறையும் மணிசங்கர் அய்யர் ஒருமுறையும் வென்றிருந்தார். 1996, 1998-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிவி ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி வென்றனர். 1999, 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் அடுத்தடுத்து மணிசங்கர் அய்யர் வென்றார். மயிலாடுதுறை தொகுதியில் மணிசங்கர் அய்யர் 3 முறை வெற்றி பெற்றார். 2009-ல் அதிமுகவின் ஓ.எஸ். மணியன், 2014-ல் அதிமுகவின் பாரதி மோகன், 2019-ல் திமுகவின் ராமலிங்கம் இத்தொகுதியில் வென்றனர்.
4-வது இடம் பெற்ற மணிசங்கர் அய்யர்: 2009-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் ஓ.எஸ். மணியன் 3,64,089 வாக்குகளையும் காங்கிரஸின் மணிசங்கர் அய்யர் 3,27,235 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் பாரதி மோகன் 5,13,729, மனித நேய மக்கள் கட்சியின் ஹைதர் அலி 2,36,679 வாக்குகளைப் பெற்றனர். அத்தேர்தலில் பாமகவின் அகோரம் 1,44,085 வாக்குகளையும் காங்கிரஸின் மணிசங்கர் அய்யர் வெறும் 58,465 வாக்குகளையும் பெற்றார். மணிசங்கர் அய்யருக்கு 4-வது இடம்தான் கிடைத்தது.
2019 தேர்தல் முடிவுகள்: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுகவின் ராமலிங்கம் 5,99,292, அதிமுகவின் ஆசைமணி 3,37,978 வாக்குகளைப் பெற்றனர். திமுக வேட்பாளர் ராமலிங்கம் 2,61,314 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார். கூட்டணி கட்சிகள் தயவில் பல முறை வெற்றி மகுடத்தை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை வேட்பாளர் வழக்கறிஞர் சுதா பெருமை தேடித் தருவாரா? என்பது எதிர்பார்ப்பு.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications