For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையை வதம் செய்த வர்தா... 5 நாட்களாக கரண்ட் இல்லை, தண்ணீர் இல்லை... பணமில்லை

சென்னையை வதம் செய்த வர்தா புயலின் தாக்கம் நான்கு நாட்களை கடந்த பின்னரும் சென்னை வாசிகளை வாட்டி வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னையில் ஆடிய ருத்ரதாண்டவம் ஓங்கி உயர்ந்த மரங்களை எல்லாம் சாய்த்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டது.

மரங்கள்அடர்ந்தமயிலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் வர்தா ஏற்படுத்திய வடு மறைவதற்கு சிலவருடங்கள் ஆகும் என்றே கூறப்படுகிறது.

வர்தாபுயலின் வேகத்தை தாங்காமல் பேயாட்டம் போட்ட மரங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காமல் முறிந்துவிழுந்தன. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஓங்கி உயர்ந்த மரங்கள் முறிந்தும், வேறோடு சாய்ந்தும் கிடப்பதைப் பார்த்து அதை பார்த்து பார்த்து வளர்த்த மக்களின் கண்களில் கண்ணீர் வருவது என்னவோ உண்மைதான்.

மரங்கள் அடர்ந்த பகுதிகள் சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, பெசன்ட்நகர் நிழல்சாலைகள், கிழக்கு கடற்கரைச் சாலை, பசுமைவெளிசாலை,கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டம்பகுதி, ஐ.சி.எஃப். ரயில்பெட்டித்தொழிற்சாலை, அண்ணாநகர் சாந்தி காலனி நிழல்சாலை, திருவான்மியூர் கலாசேஷ்த்ரா நகர் பகுதி, ராயப்பேட்டை பீட்டர்ஸ்சாலை, போயஸ்தோட்டம், ராஜா அண்ணாமலைபுரம், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம், மாதவரம் பால் பண்ணை பகுதி ஆகியவையே மரம், செடிகளுடன் காட்சியளித்தன.

மரக்குவியல்கள்

மரக்குவியல்கள்

இயற்கை எழில்சூழ்ந்த இந்த சாலைகள் வழியாக செல்வதற்கும் சென்னையின் பிறப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆசைப்படுவது உண்டு. இது எல்லாம் வர்தா புயலுக்கு முன்பு இருந்தநிலை. இப்போது வர்தா ஆடிய கோரத்தாண்டவத்திற்கு மரங்கள் முறிந்து சிறகொடிந்த பறவைபோல சாலைகள் காட்சியளிக்கின்றன. வர்தாவின் கோரத்தாண்டவத்தால் சாலைகளில் மரக்குவியல்கள், முறிந்த கிளைகளுமாய் காணப்படுகின்றன.

சிதைந்தபூங்காக்கள்

சிதைந்தபூங்காக்கள்

மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வராராவ் பூங்காவிற்குள் காலையிலும் மாலையிலும் வாக்கிங்செல்வதற்கு ஏராளமானோர் ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு மரங்கள் அடந்த பசும்சோலையாய் காணப்படும். வர்தா புயல் காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்து சிதைந்து போயுள்ளது. இதேபோல ஜெமினிமேம்பாலம் அருகில் உள்ள செம்மொழிபூங்கா மரங்கள்வேரோடு சாய்ந்து சுற்றுச்சுவர் இடிந்துள்ளது.

 சூறையாடிய புயல்

சூறையாடிய புயல்

தியாகராயநகர்நடேசன்பூங்கா, பனகல்பூங்கா, விருகம்பாக்கம்நடேசன்பூங்கா, அண்ணாநகர்டவர்பூங்கா, பழமையானராபின்சன்பூங்கா, அடையாறுசுற்றுச்சூழல்பூங்கா, பெரம்பூர்பூங்கா, மயிலாப்பூர்நாகேஸ்வரபூங்கா, கிண்டிசிறுவர்பூங்கா, எழும்பூர்அரசுஅருங்காட்சியகபூங்கா, கிண்டிஐ.ஐ.டி. ஆகியவைவர் தாபுயலின்தாக்கத்தால் முற்றிலும் சூறையாடப்பட்டு விட்டது. இந்த பூங்காக்கள் பழைய பொலிவை பெற பல ஆண்டுகள் ஆகும்.

நுங்கம்பாக்கம் அரசு அலுவலகங்கள்

நுங்கம்பாக்கம் அரசு அலுவலகங்கள்

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலை, மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள சாலைகள், அலுவலகங்களிலும் மரங்கள் அடர்ந்து பசும் சோலையாய் காணப்படும். வர்தா புயலின் தாக்கத்திற்கு தாக்குபிடிக்க முடியாத மரங்கள் சாய்ந்து சீர்குலைந்து காணப்படுகிறது.

அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக் கழகம்

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்தன. வர்தா ஆடிய கோரத்தாண்டவத்திற்கு 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சிதைந்து சின்னமாகியுள்ளது. இதேபோல சென்னை ஐஐடி பகுதியில் இருந்த மரங்களின் கதியும் என்னவானது என்ற தகவல் வெளியாகவில்லை.

 பள்ளிகள், கல்லூரிகள்

பள்ளிகள், கல்லூரிகள்

பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தமரங்கள் வேறோடுசாய்ந்தன. அவற்றை இன்னமும் முழுமையாக அகற்ற முடியவில்லை. ஒரு ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாத நிலையிலும் அரையாண்டு தேர்வுகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

போயஸ் கார்டன் பாதிப்பு

போயஸ் கார்டன் பாதிப்பு

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்கு செல்லும் சாலைகளில் மிகப்பெரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் ஜெயலலிதா வீடு உள்ள வீட்டிற்குள் செல்ல முடியாத அளவிற்குபாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணிநடை பெற்றுவருகிறது.

உயிரைவிட்டமரங்கள்

உயிரைவிட்டமரங்கள்

தினமும் காலை நடைப்பயிற்சி செல்லும் போதுநாங்கள்ரசித்து செல்லும் மரங்களும், செடிகளும் இன்று உயிரற்ற நிலையில் முறிந்து சாலையில் கிடப்பதைதங்களால் காணமுடியவில்லை எனபோயஸ் தோட்டத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். வர்தா புயல் மனிதர்களுக்கு ஏற்படுத்திய சேதத்தை விட, சென்னையை சுற்றியிருந்த மரங்களுக்குதான் அதிகசேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 5வது நாளாக மின்சாரமில்லை

5வது நாளாக மின்சாரமில்லை

வர்தா புயல் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்ட 12ம் தேதி அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்துள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்களுக்கும் மின் விநியோகம் சீராகும் என்று கூறிய அமைச்சர் தங்கமணி, மேலும் 3 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளார். 5 நாட்களாக மின்சாரமின்றி சென்னையில் பல பகுதிகளும், புறநகர் பகுதி மக்களும் தவித்து வருகின்றனர்.

 கையில் பணமில்லை

கையில் பணமில்லை

ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பினால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஏடிஎம்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த 5 நாட்களாக மின்சார தடையினால் சென்னையில் திறந்திருந்த ஒரு சில ஏடிஎம்களும் மூடப்பட்டு விட்டன. ஸ்வைப் மிசின்களும் வேலை செய்யாததால் பொதுமக்கள் பெரிதும் தவித்து போயுள்ளனர். கடந்த ஆண்டு வெள்ளம் தாக்கினாலும் கையில் பணமிருந்ததால் கடைகளில் வாங்கி சாப்பிட முடிந்தது. இந்த ஆண்டு பெரும்பாலான மக்களின் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதால் கார்டுகளை நம்பியிருந்தவர்களின் நிலை பரிதாப நிலையாகி விட்டது என்பதுதான் உண்மை.

English summary
Cyclone Vardah made landfall in Chennai on Monday, uprooting trees, defacing high rises, smashing cars, disrupting public transport and telecommunication, bringing the metropolitan area to a standstill. Power cut continued 5th day. Water problem and money problem continue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X