எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நம்பத் தயாராக இல்லை - தா.பாண்டியன் விளாசல்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை எல்லா விஷயங்களிலும் நம்பலாம். ஆனால், மக்கள் அவரை நம்புவதற்குத் தயாராக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன் மற்றும் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 D.Pandian slams Tamilnadu chief minister Edappadi Palanisamy

அப்போது பேசிய தா.பாண்டியன், மத்திய அரசு மாநில அரசுகளின் எல்லா உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்து, பயிற்சியளித்த பிறகுதான் நீட் தேர்வுகொண்டு வந்திருக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றார்.

மேலும், மத்திய அரசு நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் என நம்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அவர் வேண்டுமானால் மத்திய அரசை நம்பலாம். ஆனால் அவரை மக்கள் நம்பவில்லை என தா.பாண்டியன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People do not beleive CM Edappadi Palanisamy said D.Pandian, communist party of India.
Please Wait while comments are loading...