தஞ்சை அருகே பஸ் - மினி லாரி மோதிய விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை அருகே அரசு பேருந்தும் மினி லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்றிரவு அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என 60க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

Death toll has increased as 10 in the Thanjavur Bus accident

வல்லம் பகுதியில் உள்ள பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை நேற்றிரவு 9 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே விபத்தில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Death toll has increased as 10 in the Thanjavur Bus Accident. Injured passengers are getting treatment in Hospital.
Please Wait while comments are loading...