தீபாவின் சுயரூபம் இதுதான்... இவுகதான் தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறவங்களாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீ நல்லா இருக்க மாட்டே... நாசமா போயிருவே என் மூஞ்சியிலேயே முழிக்காதடா என்று தீபக்கை கண்டபடி திட்டி அசிங்கப்படுத்தி அர்ச்சனை செய்தார். பொறம்போக்கு, எச்சக்கலை என்றும் நடுவீதியில் அசிங்கமாக பேசி தனது தரத்தை தாழ்த்திக் கொண்டார் தீபா.

போயஸ்கார்டனில் நேற்று ஒரு மிகப் பெரிய நாடகம் அரங்கேறியது. ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களான தீபா, தீபக் ஆகியோர்தான் நேற்று ஊடகங்களுக்கு மிகப்பெரிய தீனி போட்டனர். கூடவே தீபா கணவர் மாதவனும், டிரைவர் ராஜாவும் சேர்ந்து கொண்டனர். இவர்களது அசிங்கமான சண்டை தனிக் கதையாக மாறியது.

தனது டிரைவர் ராஜாவை யாரென்றே தெரியாது என்று தீபக் சொன்னதால் ஆத்திரம் அடைந்த தீபா, பொய் சொல்லாதே, நீ நல்லாவே இருக்க மாட்ட அழிஞ்சுபோய்டுவ என்று குமுறிவிட்டார் தீபா.

மாதவனால் டென்ஷன் ஆன ராஜா

மாதவனால் டென்ஷன் ஆன ராஜா

இந்த எல்லா களேபரங்கள் நடந்த போதும் தீபாவின் கணவர் மாதவன் உடனேயே இருந்தார். இந்த காட்சிகளுக்கு நடுவே ராஜா உள்ளே வந்தார். தீபா, மாதவன் பக்கமே இருந்ததால் ஜெர்க் ஆன அவர் தீபாவை தனியாக கூட்டிச் செல்ல முயற்சித்தார். இதை ஏற்காத தீபா, தீபக் உன்னை தெரியாது என்று சொல்கிறான், உனக்கு போன் பண்ணினான்ல என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். ஏய் பிச்சக்காசுக்காக இப்படி பண்ணிட்டேல்ல எச்சக்கல... என் மூஞ்சிலேயே முழிக்காதடா என்று கூறி மேலும் திட்டி அசிங்கப்படுத்தினார்.

ஆரத்தி எடுத்து வரவேற்றாரே ஓபிஎஸ்

ஆரத்தி எடுத்து வரவேற்றாரே ஓபிஎஸ்

நேற்று தீபா பேசிய பேச்சு ஒரு தலைவர் என்று இவரை இவரே சொல்லிக் கொள்வதற்குக் கூட தகுதி இல்லை என்பதை நிரூபித்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தீபாவை அவரது வாரிசாக பல தொண்டர்கள் பார்க்கின்றனர். ஏன் ஓபிஎஸ் கூட தனது வீட்டிற்குள் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அவரையே காலை வாரி விட்டார் தீபா.

தரம் தாழ்ந்த தலைவர்

தரம் தாழ்ந்த தலைவர்

இப்போது சொத்துக்காக தனது தம்பியையே அசிங்கமான வார்த்தைகளினால் அர்ச்சனை செய்து தனது தரத்தை தாழ்த்திக்கொண்டுள்ளார். பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாதவராக தீபா வளர்ந்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது.

அநாகரீகம்

அநாகரீகம்

வீட்டிற்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொது வெளியில், அதுவும் அரசியலுக்கு வந்த தீபா, இப்படி சொந்த சகோதரனையே அசிங்கமாக பேசியது அழகா என்று பொதுமக்கள் கேட்கின்றனர். நா கூசும் வார்த்தைகளால் தரை லோக்கலுக்கு இறங்கி திட்டிய தீபாவை நம்பித்தான் பல ஆயிரக்கணக்கனோர் பேரவை உறுப்பினர்கள் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பலோடு இருந்தால்

கும்பலோடு இருந்தால்

தீபாவைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு முகத்தையும் பாருங்கள். குறிப்பாக அந்த ராஜாவைப் பாருங்கள். இவர்களெல்லாம் பார்க்க அவ்வளவு நல்லவங்களா இல்லையே என்ற விவேக் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. அதிலும் ராஜா நேற்று தீபா முன்பே அவரது கணவரைப் பார்த்து அவரது தாயை இழிவுபடுத்திப் பயன்படுத்திய வார்த்தை.. இவங்க இவ்வளவுதான் என்பதை நிரூபித்து விட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa showded her real face in the public yesterday. She abused her brother in public and used abusive words against him.
Please Wait while comments are loading...